கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்

கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்

கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2017 | 10:28 am

கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் சிலவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கிளிநொச்சி பாரதிபுரம், பொன்நகர், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று (11) மாலை பலத்த காற்று வீசியுள்ளது.

இதனால் சில வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக சில பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்யக்கூடும் என்பதுடன், 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை தாண்டிக்குளம், பெரியகந்தை, மடுகட்டு ஆகிய பகுதிகள் சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகளாக காணப்படும் எனவும் திணைக்கம் கூறுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்