வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட சில வரித்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை

வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட சில வரித்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 8:51 pm

வரவு செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட சில வரித்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்தது.

வரித்திருத்தம் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் இதுவரை தமது திணைக்களத்திற்குக் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

வரவு செலவுத்திட்ட பிரேரணைகளுக்கு ஏற்ப, வருமான வரி மற்றும் பொருளாதார சேவைக் கட்டணங்களில் ஏப்ரல் மாதத்தில் திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2006 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க வருமான வரி சட்டத்தின் படி, முதலீடுகளுக்கான வரிச்சலுகை, ஏற்றுமதிக்கான வரிச்சலுகை, மூலதன கொடுப்பனவு உள்ளிட்ட பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வரி தொடர்பான திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, அது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான சட்டமூலத்திற்கு அனுமதி பெறப்பட வேண்டும்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்