பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பயணமானார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பயணமானார்

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 3:07 pm

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜப்பான் பயணமானார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை சந்திக்கும் நோக்கில் இலங்கை பிரதமர் ஜப்பான் நோக்கி பயணமாகியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் மற்றும் இலங்கைக்கான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்வுகளில் பிரதமர் இதன்போது கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழு ஜப்பான் நோக்கி இன்று பயணமானது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்