தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: 28 மாணவர்களுக்கு ஒரு மாத வகுப்புத்தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: 28 மாணவர்களுக்கு ஒரு மாத வகுப்புத்தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: 28 மாணவர்களுக்கு ஒரு மாத வகுப்புத்தடை

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 4:42 pm

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்காக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் குறிப்பிட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாக பிரயோக விஞ்ஞான பீடத்தில் புதுமுக மாணவர்கள் பகிடிவதைக்கு உள்ளாவதாகக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, பகிடிவதையில் ஈடுபட்ட 18 மாணவிகளுக்கும் 10 மாணவர்களுக்கும் ஒரு மாத வகுப்புத்தடை அறிவிக்கப்பட்டது.

பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்களுக்கே வகுப்புத்தடை அறிவிக்கப்பட்டதாக துணை வேந்தர், பேராசிரியர் எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.

மேலும், சுற்றிவளைப்பின் போது குறித்த மாணவர்களிடமிருந்து மருந்து வில்லைகளும், சில கோப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்மாந்துறை வளாகத்தின் சிற்றுண்டிச்சாலையில் அதிகாலை 5 மணி தொடக்கம் புதுமுக மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்