திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது: விஷால்

திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது: விஷால்

திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது: விஷால்

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 6:55 pm

ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது என நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நெருப்புடா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு ஊடகங்கள் எவையும் விமர்சனங்களை வெளியிடக்கூடாது என தெரிவித்த விஷால், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்