தற்போதைய நிலை தொடர்ந்தால் மக்கள் அரசாங்கத்தை வெறுக்கும் நிலை ஏற்படும்: இரா.சம்பந்தன்

தற்போதைய நிலை தொடர்ந்தால் மக்கள் அரசாங்கத்தை வெறுக்கும் நிலை ஏற்படும்: இரா.சம்பந்தன்

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 7:19 pm

தற்போதைய நிலை தொடர்ந்தால் மக்கள் அரசாங்கத்தை வெறுக்கும் நிலை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்து, பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள 150 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்