ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் புத்தரிசித் திருவிழா

ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் புத்தரிசித் திருவிழா

ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் புத்தரிசித் திருவிழா

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 7:51 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை பொலன்னறுவையில் புத்தரிசித் திருவிழா நடைபெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை கல்விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பின்னர் பராக்கிரம சமுத்திரத் திட்டத்தின் லக்ஷ உயன கிராமத்திலிருந்து பெறப்பட்ட தமது பங்கினை ஜனாதிபதி சமர்ப்பணம் செய்தார்.

முதலாவது அறுவடை கல்விஹாரைக்கு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, புத்தரிசித் திருவிழா ஆரம்பமானது.

இந்த விழாவில் பொலன்னறுவையைச் சேர்ந்த விவசாயிகளும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்