சீனா – இங்கிலாந்து இடையே நேரடி சரக்கு ரயில் சேவை ஆரம்பம்

சீனா – இங்கிலாந்து இடையே நேரடி சரக்கு ரயில் சேவை ஆரம்பம்

சீனா – இங்கிலாந்து இடையே நேரடி சரக்கு ரயில் சேவை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 5:13 pm

சீனா – இங்கிலாந்து இடையே நேரடி சரக்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

7,500 மைல்கள் வரை பயணிக்கக்கூடிய இந்த சரக்கு ரயில் சேவை, இங்கிலாந்திலிருந்து சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகருக்கு பயணிக்கிறது.

30 பெட்டிகளுள்ள இந்த சரக்கு ரயிலில் விஸ்கி, குளிர்பானங்கள், வைட்டமின்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல பிரித்தானியப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது.

17 நாட்களில் 7,500 மைல்களைக் கடந்து ஸெஜியாங் மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற மொத்த சந்தை நகரமான யுவூவினை இந்த ரயில் சென்றடையும்.

இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, மற்றும் கஜகஸ்தான் ஆகிய 7 நாடுகளைக் கடந்து இந்த ரயில் பயணிக்கவுள்ளது.

இந்த சேவை வான் மற்றும் கடல் மார்க்கமான போக்குவரத்தை விட விரைவாகவும் குறைவான கட்டணத்திலும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்