சாவகச்சேரியில் வாள்வெட்டு: ஆவா குழுவுடன் தொடர்புடைய ஐவர் கைது

சாவகச்சேரியில் வாள்வெட்டு: ஆவா குழுவுடன் தொடர்புடைய ஐவர் கைது

சாவகச்சேரியில் வாள்வெட்டு: ஆவா குழுவுடன் தொடர்புடைய ஐவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 7:59 pm

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என யாழ். பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஸ்ரெனிஸ்லஸ் தெரிவித்தார்.

இந்த சந்தேகநபர்கள் ஆவா குழுவுடன் ஏற்கனவே தொடர்புகளை வைத்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்