கொழும்பு – குருநாகல் வீதியில் விபத்து: குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

கொழும்பு – குருநாகல் வீதியில் விபத்து: குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

கொழும்பு – குருநாகல் வீதியில் விபத்து: குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 4:16 pm

கொழும்பு – குருநாகல் வீதியில் பொத்துஹெர – போயகன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியொன்று டிப்பருடன் மோதி இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியை செலுத்திய 26 வயது இளைஞரும் அவரது இரண்டரை வயதுக் குழந்தையும் அடையாளங்காணப்படாத பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்