கொழும்பில் மேலதிகமாக பாதுகாப்பு கெமராக் கட்டமைப்புகளைப் பொருத்த நடவடிக்கை

கொழும்பில் மேலதிகமாக பாதுகாப்பு கெமராக் கட்டமைப்புகளைப் பொருத்த நடவடிக்கை

கொழும்பில் மேலதிகமாக பாதுகாப்பு கெமராக் கட்டமைப்புகளைப் பொருத்த நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2017 | 4:27 pm

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கெமராக்களின் கட்டமைப்புகளை மேலும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேலதிகமாக 9 இடங்களில் பாதுகாப்பு கெமராக் கட்டமைப்புகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டது.

இதற்காக 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தினூடாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும் வீதி விபத்துக்கள் குறித்து ஆராயவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இந்த புதிய திட்டம் குறித்து பொலிஸாருடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்