ஹட்டன் பஸ் நிலையத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

ஹட்டன் பஸ் நிலையத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 2:29 pm

ஹட்டன் நகரின் பஸ் நிலையத்தில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹட்டன் நகரில் கூலித்தொழில் செய்யும் 48 வயதான பொன்னுசாமி கணேஷன் எனும் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் காணப்படுவதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட அடையாளங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபரும் கூலித்தொழில் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த நபர் 3 பிள்ளைகளின் தந்தை என்பதுடன், இவர் அளுத்கால, டிக்கோயா பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்