மருதங்கேணியில் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதி

மருதங்கேணியில் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 8:10 pm

யாழப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணி பகுதியில் புடவை கடை நடத்தி வரும் 32 வயதான தவராசா நிமல்ராஜ் எனும் நபரே நேற்று (07) மாலை வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் இதுதொடர்பில் பளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்த போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாக்குதலுக்குள்ளான நபர் தெரிவித்தார்.

119 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டதன் பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததாக எமது அவர் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு இலக்கான வேலையற்ற பட்டடதாரியான தவராசா நிமல்ராஜ் கடந்த ஒரு வருடமாக புடவை கடை நடத்தி வருகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்