தேசிய புத்தரிசி திருவிழா ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில்

தேசிய புத்தரிசி திருவிழா ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 6:39 pm

தேசிய புத்தரிசி திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அநுராதபுர ஜய ஶ்ரீ மஹாபோதியில் இன்று (08) இடம்பெற்றது.

புத்தரிசி திருவிழாவை, விவசாய அமைச்சும், கமநல சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து 50 ஆவது தடவையாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்விற்கு முன்னர் வராலாற்று சிறப்புமிக்க ஶ்ரீ மஹாபோதியில் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் விவசாய அமைச்சர் துமிந்த திசநாயக்க, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது ஜனாதிபதி கருத்து தெரிவுக்கையில்…

[quote]வடமத்திய மாகாணத்தில் பாரிய வறட்சி ஒன்று ஏற்பட்டமை எனக்கு நினைவிருக்கின்றது, 2013 ஆம் ஆண்டில் அநுராதபுரம்,பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, மற்றும் வடக்கில் அறுவடையை பெற்றுக் கொள்ளமுடியாது போனது. பாரிய வறட்சி ஏற்பட்டிருந்தது. எனினும் அந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனினும் இம்முறை வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களைப்போன்று இதற்கு முன்னர் எவரும் முன்னெடுக்கவில்லை என நான் எண்ணுகின்றேன்.[/quote]

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்