கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து

கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து

கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 5:49 pm

மின் கசிவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தீயணைப்புப் துறையினருக்கு அறிவித்ததை தொடரந்து அவர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

வீட்டின் 3 ஆவது மாடியில் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு வரும் வயரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அது தீப்பிடித்து எரிந்துள்ளது.

அந்த தீ பரவி அருகில் இருந்த குளிரூட்டி இயந்திரத்தில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது, தீயணைப்புப் படையினர் உடனே வந்ததால் தீ அணைக்கப்பட்டுள்ளது இதனால் ஏற்படவிருந்த பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கமல், “என் வீட்டின் 3 ஆவது மாடியில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வந்தது. உடனே தீ அணைக்கப்பட்டது.

அங்கு இருந்த பணியாளர்கள் உடனே வெளியே வந்துவிட்டார்கள். நான் பத்திரமாக இருக்கிறேன். யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

கமல் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வண்டி நள்ளிரவில் வந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்