கச்சாய் – புலோலி வீதியை செப்பனிடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு வீதிக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு

கச்சாய் – புலோலி வீதியை செப்பனிடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு வீதிக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2017 | 7:39 pm

யாழ்ப்பாணம், கச்சாய் – புலோலி வீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதிகளினால் வேறிடத்திற்கு மாற்றப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏ 9 வீதி திறக்கப்பட்டதன் பின்னர் பருத்தித்துறைக்கான பிரதான போக்குவரத்து வீதியாக கச்சாய் – புலோலி வீதி விளங்குகின்றது.

இந்த வீதியூடாகவே பருத்தித்துறையிலிருந்து கொழும்பு உள்ளிட்ட தூர இடங்களுக்கும்,வெளி மாவட்டங்களுக்குமான பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன.

தென்மராட்சியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திப்பொருட்களை வடமராட்சி எடுத்துச் செல்வதற்கும், அதேபோல் வடமாரட்சியிலிருந்து கடல் உணவுப் பொருட்களும் இந்த வீதியூடாக வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

தென்மராட்சியையும் – வடமராட்சியைும் இணைக்கும் சுமார் 14 கிலோமீற்றர் நீளமான கச்சாய் – புலோலி வீதி பல தசாப்தங்களாக செப்பனிடப்படாமை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நியூஸ்பெஸ்ட் சுட்டிக்காட்டியது.

கச்சாய் – புலோலி வீதியை செப்பனிடுவதற்கான அளவீட்டுப்பணிகள் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை வீதி செப்பனிடும் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீதி அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கச்சாய் – புலோலி வீதியை கார்ப்பட் வீதியாக செப்பனிடுவதற்காக, நிதி ஒதுக்கப்பட்ட நியைில் அரசியல் தலையீடு காரணமாக வேறு வீதிக்கு நிதி மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்