கையடக்க தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்: அர்ஜுன் மகேந்திரனுக்கு அறிவிப்பு

கையடக்க தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்: அர்ஜுன் மகேந்திரனுக்கு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2017 | 9:30 pm

முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கையடக்க தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் என அர்ஜுன் மகேந்திரனுக்கு ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்தார்.

28 ஆவது நாளாகவும் ஆணைக்குழு இன்று கூடியது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதைத் தாம் அவதானித்ததாகவும் அதனைத் தவிர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்துமாறும் ஆணைக்குழுவின் தலைவர், அர்ஜுன் மகேந்திரனின் சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் வசந்த அல்விஸ் இன்று சாட்சியமளித்தார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி நாளாந்த பணப்புழக்க வசதி கணக்குகளைத் தீர்க்க வேண்டியிருந்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

எனினும், ஏப்ரல் 4 ஆம் திகதியே அந்த கணக்குகள் தீர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் பணத்தை செலுத்தும் வரை அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், இது வழமைக்கு மாறான செயற்பாடு எனவும் வசந்த அல்விஸின் சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்