புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 4:01 pm

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட வாகன போக்குவரத்தை அமுல்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பண்டிகை காலத்தில் வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபரினால் நேற்று (04) ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இதன் போது மதுபோதையில் வாகனத்தை செலுத்துவோரை கைது செய்வதற்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி அதிவேக நெடுஞ்சாலையில் வசதிகள் செய்தி கொடுக்கப்படவுள்ளன.

நாளை முதல் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்