பிரமுகர் கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பிரமுகர் கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 8:40 pm

பிரமுகர் கொலை முயற்சிக்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்திற்கொண்ட நீதிபதி, ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பிரமுகர் ஒருவரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக கடந்த ஜனவரி மாத இறுதியில் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டருந்த ஐந்து பேர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் சிலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்