பதவி மாற்றங்கள் தொடர்பில் தீர்மானம் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவு

பதவி மாற்றங்கள் தொடர்பில் தீர்மானம் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவு

பதவி மாற்றங்கள் தொடர்பில் தீர்மானம் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 8:34 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (05) முற்பகல் நடைபெற்றது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்க்ள பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறிது நேரத்தில் சிறிகொத்தா வளாகத்தில் இருந்து வெளியேறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சில பதவிகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளியான தகவல்கள் காரணமாக இன்றைய செயற்குழுக் கூட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்