தீர்வின்றித் தொடரும் நிலமீட்புப் போராட்டங்கள்

தீர்வின்றித் தொடரும் நிலமீட்புப் போராட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 8:02 pm

பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு மக்கள் ஆரம்பித்த போராட்டம் தீர்வின்றித் தொடர்கிறது.

காணி உறுதி உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து வடக்கின் மேலும் சில பகுதிகளில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது 530 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 36 நாட்கள் கடந்துள்ளன.

இதேவேளை கடற்படையின் பயிற்சி முகாமாகவுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்கக் கோரி முள்ளிக் குளத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் இன்று தொடர்ந்தது.

இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் பூர்த்தியடைந்துள்ளன.ை

முல்லைத்தீவு – நீராவிப்பிட்டி மக்களும் ஆறாவது நாளாக இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 1990 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தமக்கான காணி உரிமத்தை வழங்குமாறு கோரி, பன்னங்கண்டி மக்கள் 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்