டெனியலா கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

 டெனியலா கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 7:45 pm

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எம்.எஸ்.சீ டெனியலா கப்பலில் பரவிய தீ இன்று (05) பிற்பகல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

எம்.எஸ்.சீ டெனியலா கப்பல் சிங்கப்பூரில் இருந்து எகிப்து வரை பயணித்துக் கொண்டிருக்கையில் நேற்று (04) பிற்பகல் தீ பரவியுள்ளது.

இலங்கையில் இருந்து 120 கடல்மைல் தொலைவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிந்தவுடன் கொழும்பு துறைமுக அதிகாரிகள் சிலரும் இலங்கை கடற்படை பிரதிநிகள் சிலரும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

அதன்போது டெனியலா கப்பல் கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

சினேகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருத்த இந்தியாவின் ஷூர் கப்பல் மற்றும் இந்தியாவின் கடற்படைக்கு சொந்தமான தர்ஷக் மற்றும் கெரிசர் மற்றும் கடற்படை தாக்குதல் கப்பல் என்பன தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

நேற்று காலை முதல் தீயை அணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்று பிற்பகல் வரை அது வெற்றியளிக்கவில்லை என்பதுடன் அனைத்து தரப்பினரும் இணைந்து தீ பரவுவதை நிறுத்தினர்.

இலங்கை விமானப் படையும் பெல் 212 வர்க்க ஹெலிகொப்டர் இன்று (05) பிற்பகல் தீயணைப்பு பணியில் இணைந்து கொண்டது.

ஒரே தடவையில் 14000 கொள்கலன்களை ஏற்ற முடியுமான உலகின் மிகப் பெரிய கப்பலான டெனியலா கப்பலில் தீ பரவிய போது 10,000 இற்கும் அதிகமான கொள்கலன்கள் இருந்துள்ளதாக இலங்கையின் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது 21 பணியாளர்கள் கப்பலில் இருந்துள்ளதுடன், தீயினால் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை.

சுவிட்ஸர்லாந்தின் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இந்தக் கப்பல் பனாமா கொடியுடன் பயணித்துள்ளது.

இதன்போது உபபொருட்கள் இந்தக் கப்பலில் காணப்பட்டதாக அறியக்கிடைத்தமையினால் இலங்கையின் தரையில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் வைத்து தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக கடற்படைத் தளபதி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்