சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் யுத்தக்குற்றம் என ஐ.நா செயலாளர் நாயகம் கண்டனம்

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் யுத்தக்குற்றம் என ஐ.நா செயலாளர் நாயகம் கண்டனம்

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் யுத்தக்குற்றம் என ஐ.நா செயலாளர் நாயகம் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 6:16 pm

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் யுத்தக்குற்றம் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் Antonio Guterres கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் யுத்தக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றமையை இந்த தாக்குதல்கள் பறைசாற்றுவதுடன் சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுக்கான பொறுப்பு கூறல் விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஐ.நா பாதுகாப்பு பேரவை மேற்கொள்ள வேண்டும் எனவும் குட்டேரஸ் கூறியுள்ளார்.

நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிக்கி 20 சிறுவர்களுடன் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்