சிரச வெசாக் வலயம் குறித்து அஸ்கிரிய, மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

சிரச வெசாக் வலயம் குறித்து அஸ்கிரிய, மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 9:42 pm

வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மஹாராஜா நிறுவனம், ஜோன் கீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் சிரச வெசாக் வலயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன.

இது குறித்து இன்று (05) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

சிரச வெசாக் வலய ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் இன்று அஸ்கிரிய மஹாநாயக்கர் வராக்காகொட ஶ்ரீஞானரத்தன தேரரை சந்தித்து ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

பின்னர் மல்வத்து மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீசுமங்கல தேரரை சந்தித்து சிரச வெசாக் வலயம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

இம் முறை சிரச வெசாக் வலயம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு 2 பிரேபுறூக் பிளேசில் அமைந்துள்ள கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்