ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதிவாதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதிவாதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதிவாதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 1:46 pm

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதிவாதிகள் நால்வர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று (05) ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் முகாந்திரம் வீதியிலுள்ள வீடொன்றினுள் 56 வயதான என்.எம்.சித்தி உஸைரா மற்றும் அவரது மகளான 32 வயதான ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் பொல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்