மீனவர் பேச்சுவாரத்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால் கச்சத்தீவை நோக்கி முற்றுகைப் போராட்டம்

மீனவர் பேச்சுவாரத்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால் கச்சத்தீவை நோக்கி முற்றுகைப் போராட்டம்

மீனவர் பேச்சுவாரத்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால் கச்சத்தீவை நோக்கி முற்றுகைப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2017 | 2:10 pm

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவாரத்தையின் போது சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால் கச்சத்தீவை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று (04) மாலை மீனவப் பிரநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, முற்றுகை போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 145 படகுகளையும் விடுவிக்கப்படாததால் இந்த படகுகளை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவப் பிரநிதி போஸ் கூறியுள்ளார்.

இந்த கச்சத்தீவு முற்றுகை போராட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவோடு தமிழகத்தின் அனைத்து மாவட்ட மீனவர்களும் கலந்து கொள்வார்கள் என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளதாகவும் த இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்