மட்டக்களப்பில் டெங்கு: 1600 க்கும் அதிகமானோர் பதிவு

மட்டக்களப்பில் டெங்கு: 1600 க்கும் அதிகமானோர் பதிவு

மட்டக்களப்பில் டெங்கு: 1600 க்கும் அதிகமானோர் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 4:09 pm

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 1600 க்கும் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் 980 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலைமையின் கீழ், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிமை உயிரிழந்துள்ளார்.

இதன் பிரகாரம் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நால்வர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்