எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் அரிசியை நிர்ணய விலையில் விநியோகிக்க முடியாது – இறக்குமதியாளர்கள் சங்கம்

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 3:23 pm

வரிச்சலுகை நீடிக்கப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் அரிசியை அரசாங்கத்தின் நிர்ணய விலையில் விநியோகிக்க முடியாதென அத்தியாவசியப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், அரிசி இறக்குமதியில் அதிக செலவீனத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

எனினும், பண்டிகைக்காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பண்டிகைக் காலப்பகுதியில் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக வர்த்தக விவகார அமைச்சு குறிப்பிட்டது.

இதன் பொருட்டு, நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புக் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்குஹெட்டி கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்