வோட்டர் ஜெல் வெடிபொருள் குச்சிகளுடன் மூவர் கைது

வோட்டர் ஜெல் வெடிபொருள் குச்சிகளுடன் மூவர் கைது

வோட்டர் ஜெல் வெடிபொருள் குச்சிகளுடன் மூவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 3:54 pm

வோட்டர் ஜெல் எனப்படும் வெடிபொருள் குச்சிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருடன் கூட்டாக நடத்திய தேடுதலின்போது, குச்சவெளி பகுதியில் ஐந்தரை கிலோகிராம் வோட்டர் ஜெல் வெடிபொருள் குச்சிகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

இதேவேளை, புல்மோட்டை, அரிசிமலை பகுதியிலும் 2.6 கிலோகிராம் வோட்டர் ஜெல் குச்சிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடத்திய தேடுதலின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு சந்தேகநபர்களை குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்