முல்லைத்தீவில் சிசுவை பொல்லால் அடித்துக் கொலை செய்து எரியூட்டிய பெண் கைது

முல்லைத்தீவில் சிசுவை பொல்லால் அடித்துக் கொலை செய்து எரியூட்டிய பெண் கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 7:22 pm

பிறந்து 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னர் சிசுவை பொல்லால் அடித்துக் கொலை செய்து, எரியூட்டிய பெண்ணொருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு – மல்லிகைத்தீவு பகுதியில் நேற்று (03) அதிகாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மல்லிகைத்தீவு பகுதியில் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளதுடன், மறுநாள் அதிகாலை 6 மணியளவில் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பெண் சிசுவை உரப் பையொன்றினுள் இட்டு, பொல்லால் அடித்துக் கொலை செய்த பின்னர், எரியூட்டியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பெண்ணின் 14 வயது மகள் அதிகாலை பாடசாலைக்குச் சென்று, ஆசிரியர் ஒருவரிடம் சம்பவத்தைக் கூறியதை அடுத்து, அந்த ஆசிரியர் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டுள்ளதுடன், சிசுவின் தாய் என கூறப்படும் 38 வயதான பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான பெண் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்