பேராதனை பல்கலைக்கழக மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 4:18 pm

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களிடையே பரவி வரும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சரால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் பிரதி சுகாதாரப் பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவியதை அடுத்து, பேராதனை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் உபுல் திசாநாயக்க குறிப்பிட்டார்.

500 க்கும் அதிகமான மாணவர்கள் காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழக சுகாதார நிலையத்தை நாடியிருந்ததாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால், அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்ததாக பேராதனை பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்