நியூயார்க்கை விட மூன்று மடங்கு பெரிய நகரை உருவாக்க சீனா திட்டம் (Video)

நியூயார்க்கை விட மூன்று மடங்கு பெரிய நகரை உருவாக்க சீனா திட்டம் (Video)

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 6:41 pm

நியூயார்க் நகரை விட மூன்று மடங்கு பெரிய நகரத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுச்சூழல் மாசு மற்றும் நெரிசலைத் தவிர்க்க சீனா இத்தகைய நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சினுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் அதிகாரமிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்ற கூட்டத்தில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் பெரிய நகரம் ஒன்றை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்படும் இந்த நகரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என சீன அதிபர் ஷீ ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்