ஜேர்மன் பாராளுமன்றத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு

ஜேர்மன் பாராளுமன்றத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 7:11 pm

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இதன்போது, இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவருக்கு தெளிவுபடுத்தியுள்ளதோடு, சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்