சிரியாவில் விஷ வாயு தாக்குதல்: குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் விஷ வாயு தாக்குதல்: குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் விஷ வாயு தாக்குதல்: குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 5:27 pm

சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கலவரக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த கான் ஷேக்குதீன் பகுதியில் விமானங்கள் மூலம் விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில்  குழந்தைகள் உட்பட 58 பேர் பலியாகியுள்ளனர். பலரும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ வாயு (இரசாயன) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையை சிரியாவில் மனித உரிமை மீறல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இத்தாக்குதலுக்கு எந்த மாதிரியான நச்சு வாயு பயன்படுத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பு உறுதி செய்யவில்லை.

தாக்குதலில் பலியான 58 பேரில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்களே. இவர்களில்  குழந்தைகளும் அடங்குவர்.

இதற்கிடையில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாக்குதலின் வீரியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்