ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப்பெண் படுகொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப்பெண் படுகொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப்பெண் படுகொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 4:33 pm

ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் சந்தேகநபர்கள் இருவரும், முக்கிய சாட்சியாளரான வாய்பேச முடியாத 10 வயது சிறுவனின் தாயாரை, வேறொருவர் ஊடாக அணுகி, சாட்சியமளிப்பதைத் தவிர்ப்பதற்காக 5 இலட்சம் ரூபா பணம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி நேற்று நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, முறைப்பாட்டாளர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம். ரியாழ், இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வீட்டில் தனிமையில் இருந்தபோது குறித்த கர்ப்பிணிப்பெண் கொலை செய்யப்பட்டிருந்தார்.

யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றிருந்தபோதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்