இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை பொதுச்செயலாளர்

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 3:10 pm

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை நேற்று (03) சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திப்பதற்காகவே தாம் வருகை தந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் சலீல் ஷெட்டி தெரிவித்தார்.

தமது உறவினர்களை இராணுவத்திடம் தாம் ஒப்படைத்ததாக மக்கள் தெரிவித்த போதும், அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என்பது சர்வதேச ரீதியில் ஓர் பாரதூரமான குற்றம் என சலீல் ஷெட்டி சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தைப் புரிந்து செயற்பட வேண்டும் என கூறிய அவர், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே என்பது தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்