அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்புப் பேரணி: பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்புப் பேரணி: பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2017 | 8:36 pm

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் இன்று நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

நீதிமன்ற கட்டளையைப் பொருட்படுத்தாது கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியை முன்னெடுக்க பிக்குகள் முயன்ற போதே பொலிஸார் அதனைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் செரமிக் சந்தியில் கூடியவர்கள் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸார் அவர்களைக் கலைப்பதற்கு நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தினர்.

பின்னர் கோட்டை ரயில் நிலையம் முன்பாக பிக்கு மாணவர்கள் ஒன்றுகூடிய போது, அவர்களை அங்கிருந்து கலைப்பதற்கு மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்ற பிக்கு மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்