தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய பார்க் கியூன் ஹை கைது

தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய பார்க் கியூன் ஹை கைது

தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய பார்க் கியூன் ஹை கைது

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2017 | 4:56 pm

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய பார்க் கியூன் ஹை கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரியாவில் அதிபர் பார்க் கியூன் ஹை தலைமையிலான அரசாங்கம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் என்பவர் அரச விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகவும், அரசின் மிக முக்கிய இரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்று, இவர் ஆதாயமடைந்து வருவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டின.

இதையடுத்து, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார்.

மேலும், அதிபர் பார்க் கியூன் ஹை உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 இலட்சம் பேர் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் கடந்த ஆண்டில் நடைபெற்றது.

இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹை -க்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, மார்ச் 10 ஆம் திகதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அதிபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பார்க் கியூன் ஹை ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்