விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டது

விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டது

விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

31 Mar, 2017 | 4:21 pm

துபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானமொன்றிலிருந்து சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா மதிப்புள்ள ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

1.4 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டார்.

விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவரால் ஹெரோயின் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர், கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் சந்தேகநபரைக் கைது செய்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்