இந்தோனேஷியாவில் காணாமற்போன வாலிபர் மலைப்பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்பு (Video) 

இந்தோனேஷியாவில் காணாமற்போன வாலிபர் மலைப்பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்பு (Video) 

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 4:48 pm

இந்தோனேஷியாவில் காணாமற்போன வாலிபர் ஒருவர் மலைப்பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் அக்பர் சலுபிரோ தனது தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரைத் தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில், அக்பரின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், பெரிய மலைப்பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது.

சந்தேகமடைந்த உறவினர்கள் 7 மீட்டர் நீளமுள்ள அந்த பாம்பின் வயிற்றைக் கிழித்தபோது, அதில் காணாமற்போன அக்பரின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அக்பரின் உடலை மலைப்பாம்பின் உடலிலிருந்து வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்