வீட்டிற்குள் நுழைந்து பொலிஸார் தாக்கியதாக நாகர்கோவிலில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண் தெரிவிப்பு

வீட்டிற்குள் நுழைந்து பொலிஸார் தாக்கியதாக நாகர்கோவிலில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 6:11 pm

யாழ். வடமராட்சி, நாகர்கோவில் பிரதேசத்தில் கர்பிணிப் பெண் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு வீட்டிற்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் உள்ள இந்தப் பெண்ணின் வீட்டிற்கு நேற்றிரவு 9 மணியளவில் சிலர் சென்றுள்ளதுடன், வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர்.

குறித்த கர்ப்பிணிப் பெண் மாத்திரமே வீட்டில் இருந்ததால், அவர் கதவைத் திறக்க மறுத்துள்ளார்.

இதனால், அவர்கள் கதவை உடைத்து உள்நுழைந்து, தன்மீது தாக்குதல் மேற்கொண்டதாக 20 வயதான கர்ப்பிணிப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான அப்பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, அயலவர்கள் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், தகராறு நிலவுவதாக 119 க்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப, அங்கு தாம் சென்றதாகவும் அந்தப் பெண் மீது தாம் தாக்குல் எதனையும் மேற்கொள்ளவில்லையெனவும் அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பருத்தித்துறை தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்