விளையாட்டுத்துறையில் ஆற்றல் மிக்கவர்களைக் கௌரவப்படுத்தும் ‘பிளாட்டினம் விருது வழங்கல் விழா’ நாளை

விளையாட்டுத்துறையில் ஆற்றல் மிக்கவர்களைக் கௌரவப்படுத்தும் ‘பிளாட்டினம் விருது வழங்கல் விழா’ நாளை

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 8:23 pm

விளையாட்டுத்துறையில் ஆற்றல் மிக்கவர்களுக்கு மகுடம் சூட்டும் மாபெரும் விருது வழங்கல் விழா நாளை (31) இரவு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறையில் ஆற்றல்களை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்களை கௌரவிப்பதற்காக ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளாட்டினம் விருது வழங்கல் விழா நடத்தப்படுகிறது.

இலங்கையில் இலத்திரனியல் ஊடகமொன்று விளையாட்டுத்துறைக்காக நடத்தும் முதல் விருது வழங்கல் விழா இதுவாகும்.

நாளைய இரவை வர்ணமயமாக்க உள்நாட்டு இசைக்கலைஞர்களும், பாடகர்களும் தயாராகவுள்ளனர்.

விழாவில் 20 பிரதான விருதுகளும் பாராட்டுப்பதக்கங்கள் பத்தும் வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் கிடைக்கக்கூடிய வாழ்நாள் சாதனையாளருக்கான பிளாட்டினம் விருதும் பரிசளிக்கப்படவுள்ளன.

பாடசாலைகள், விளையாட்டுக்கழகங்கள், தேசிய குழாம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத்துறையில் நிபுணத்துவம் கொண்ட நடுவர் குழாம் விருதுக்கு உரியவர்களைத் தெரிவுசெய்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்