வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொய் பிரசாரங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொய் பிரசாரங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொய் பிரசாரங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 10:40 pm

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த 4 பகுதிகளை பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிகளாகப் பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த வர்த்தமானி அறிவித்தலில் அண்மையில் கையொப்பமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மக்கள் வசிக்கும் கிராமங்கள் – காணிகள் – வீடுகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களை அரசாங்கம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக சிலர் கூறிவருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மக்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகிலுள்ள வனப்பகுதிகளையும் பிரதேச மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்