விமான நிலைய ஓடுபாதையில் செல்ஃபி: விமான இறக்கை தாக்கி பெண்கள் இருவர் உயிரிழப்பு

விமான நிலைய ஓடுபாதையில் செல்ஃபி: விமான இறக்கை தாக்கி பெண்கள் இருவர் உயிரிழப்பு

விமான நிலைய ஓடுபாதையில் செல்ஃபி: விமான இறக்கை தாக்கி பெண்கள் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 4:32 pm

மெக்சிகோவில் விமான நிலைய ஓடுபாதையில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் இருவர் மீது விமான இறக்கை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

சிகுவாஹூவா (Chihuahua) மாநிலத்தைச் சேர்ந்த நிட்ஷியா மெண்டோசா கோரல் (18), கிளாரிசா மார்குசோ மிராண்டா (17) ஆகிய இருவரும் விமான நிலைய ஓடுபாதையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது, விமானத்தின் இறக்கைகள் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விமான ஓடுபாதையில் நின்றிருந்த வேன் ஒன்றின் பின்புறத்தில் நின்று இவ்விருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர்.

இதன்போது, வேனை உரசுவது போன்று மிக அருகில் சென்ற விமானத்தின் இறக்கை, குறித்த பெண்களில் தலைப் பகுதியில் தாக்கியுள்ளது.

அருகிலிருந்தவர்கள் இவ்விருவரையும் அங்கு நிற்காதீர்கள் என எச்சரித்தும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

நிட்ஷியா சட்டம் படித்து வந்தவர் எனவும் கிளாரிசா கடந்த ஆண்டு பாடசாலைக் கல்வியை முடித்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்