பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு உலகின் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருது

பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு உலகின் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருது

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 3:26 pm

உலகின் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருது, காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான உலகின் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், 13 நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு உலகின் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

சமாதானம், சட்டம், மனித உரிமைகள் மற்றும் பெண்களை வலுவூட்டல் உள்ளிட்ட துறைகளில் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் செயற்பட்ட பெண்களுக்கு வருடாந்தோறும் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளரான சந்தியா எக்னெலிகொடவும் இந்த வருடத்திற்கான உலகின் துணிச்சல் மிக்க பெண்ணாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்