பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒரு வருட போட்டித்தடை; 9500 டொலர் அபராதம்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒரு வருட போட்டித்தடை; 9500 டொலர் அபராதம்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒரு வருட போட்டித்தடை; 9500 டொலர் அபராதம்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 3:59 pm

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒரு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 9500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் போது, கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் இருவர் தம்மை அணுகியமை குறித்த தகவலை மறைத்த குற்றத்திற்காக மொஹமட் இர்ஃபானுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவினால் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மொஹமட் இர்ஃபான் ஒப்புக்கொண்டுள்ளார்.

சூதாட்டக்காரர்கள் இருவர் தம்மை அணுகியமை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அறிவிக்காமை தனது தவறாகும் என தெரிவித்துள்ள இர்ஃபான், அதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

34 வயதான மொஹமட் இர்ஃபான், பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இஸ்லாமபாத் யுனைட்டெட் அணிக்காக விளையாடியிருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமைக்காக மொஹமட் அமீர் , மொஹமட் அஷீப், சல்மான் பட் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்