தங்கத்தை வென்றது தண்ணீர்: கனிம அகழ்வுகளுக்கு தடை விதித்த முதல் நாடாகியது எல் சல்வடோர்

தங்கத்தை வென்றது தண்ணீர்: கனிம அகழ்வுகளுக்கு தடை விதித்த முதல் நாடாகியது எல் சல்வடோர்

தங்கத்தை வென்றது தண்ணீர்: கனிம அகழ்வுகளுக்கு தடை விதித்த முதல் நாடாகியது எல் சல்வடோர்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 7:09 pm

எல் சல்வடோரில் உலோகக் கனிமப் படிவுகளைக் கண்டறியும் ஆய்வுகளும் கனிம அகழ்வுகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

எல் சல்வடோர் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தத் தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், கனிம அகழ்வுகளை முற்றாகத் தடை செய்த உலகின் முதல் நாடாக எல் சல்வடோர் பதிவாகியுள்ளதென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் குறைவடைந்து வரும் சுத்தமான குடிநீரைக் காக்க இந்த சட்டம் தேவயானது என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

”எல் சல்வடோரில் தங்கத்தை வென்றது தண்ணீர்” என ஜோனி ரைட் சோல் எனும் பாராளுமன்ற உறுப்பினர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எல் சல்வடோரின் தங்கத்தை அகழ்ந்தெடுத்து இலாபம் சம்பாதித்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தத் தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அங்கு நிலக்கரி, உப்பு, உலோகமல்லாத பொருட்களை அகழ்வதற்கு தடை விதிக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்