சிரிமல்வத்த நவோத்யா பாடசாலையின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 18 மாணவர்கள் காயம்

சிரிமல்வத்த நவோத்யா பாடசாலையின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 18 மாணவர்கள் காயம்

சிரிமல்வத்த நவோத்யா பாடசாலையின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 18 மாணவர்கள் காயம்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 3:33 pm

கண்டி – வத்தேகம, சிரிமல்வத்த நவோத்யா பாடசாலையின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் கண்டி போதனா வைத்தியசாலையிலும் யக்கஹபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களே காயமடைந்துள்ளனர்.

சுமார் 70 வருடங்கள் பழைமையான பாடசாலைக் கட்டடமொன்றின் கூரையே உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம் ஏற்பட்டதை அடுத்து, தரம் ஐந்தில் கல்வி பயிலும் ஏனைய மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்