உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச

உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச

உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 3:14 pm

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கடந்த 9 நாட்களாக மேற்கொண்டுவந்த உண்ணாவிரதத்தை இன்று முற்பகல் கைவிட்டுள்ளார்.

பல்லத்தர சுமனஜோதி தேரர் உள்ளிட்ட தேரர்கள் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவிற்கு ஆசி வழங்கியதை அடுத்து அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார்.

உணவு உட்கொள்வதைத் தவிர்த்து வந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று (29) மாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவன்ச தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் நிராகரித்திருந்தது.

இதனையடுத்து, விமல் வீரவன்ச சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்