இருபது வருடங்களுக்குப் பிறகு இணையும் ‘இருவர்’

இருபது வருடங்களுக்குப் பிறகு இணையும் ‘இருவர்’

இருபது வருடங்களுக்குப் பிறகு இணையும் ‘இருவர்’

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2017 | 5:44 pm

மணிரத்னம் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் இருவர்.

மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர், ஐஸ்வர்யா ராய், தபு, கௌதமி உள்ளிட்ட பலரும் நடித்து அரசியல் பின்னணியில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், மோகன்லால் – பிரகாஷ் ராஜ் இணைந்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

`ஒடியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் இயக்குகிறார்.

இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார்.

மஞ்சு வாரியர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ள இப்படத்திற்கு, எம்.ஜெயச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

2018 ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்